இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து இன்று காலை மாரடைப்பால் மரணமடைந்தார். இந்த செய்தி ரசிகர்கள் வட்டாரத்தை கண்கலங்க வைத்திருக்கிற இயக்குநர் மாரிமுத்து (வயது 56) தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர். கவிஞர் வைரமுத்துவிடம் உதவியாளராக பணியில் இருந்தார். பின்னர் 2011ல் மாரிமுத்துவிற்கு திரைப்படங்களில் துணை நடிகராக வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருந்தது. இதைத் தொடர்ந்து சன் தொலைக் காட்சியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் என்ற நாடகத்தில் ஆதிகுணசேகரன் என்ற கேரக்டரை வைத்து தமிழகம் மட்டுமல்லாது உலகமே வியக்கும் அளவுக்கு மாரிமுத்து நடிப்புத் திறமையால் பேரை நிலைநாட்டினார். கடைசியாக ஜெயிலர் முக்கிய கதாபாத்திரமாக நடித்த மாரிமுத்து இன்று காலை ரிக்கார்டிங் தியேட்டரில் தன் குரல்வளத்தை பதிவு செய்துவிட்டு வரும்போது மாரடைப்பு வந்ததாக கூறப்படுகிறது. இதன் பின்னர் மாரிமுத்துவை சென்னையில் உள்ள சூர்யா மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது மாரிமுத்து மாரடைப்பால் மரணமடைந்து விட்டார் என்ற செய்தியை மருத்துவர்கள் பதிவிட, தற்போது ரசிகர்களும், நடிகை, நடிகர்களும் மாரிமுத்து இறப்பு செய்தியை கேட்டு அதிர்ச்சியில் உறைந்து இருக்கின்றனர்.
இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து குடும்பத்திற்கு தாழை நியூஸ் ரூ மீடியா ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறது.