• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

உரிமைகளை நிலைநாட்ட போராடிய தியாகியருக்கு எனது வணக்கம்-ஸ்டாலின் ட்வீட்

Byகாயத்ரி

Feb 21, 2022

உலகம் முழுவதும் இன்று (21ம் தேதி) உலக தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உலக தாய்மொழி தினம் குறித்து ட்வீட் ஒன்றை அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: “உலகத் தாய்மொழி நாளில், தங்கள் மொழிகளைப் பாதுகாக்கவும், உரிமைகளை நிலைநாட்டவும் போராடிய தியாகியருக்கு எனது வணக்கத்தை செலுத்துகிறேன்.அவர்களது தியாகத்தில் இருந்து பெறும் உணர்வெழுச்சி கொண்டு, ஒற்றை மொழியின் ஆதிக்கம் இன்றி – அனைத்து மொழிகளும் சமமாக நடத்தப்படும். அனைவருக்கும் சமமான இந்தியாவைக் காண நாம் அனைவரும் உறுதியேற்போம்” என்று தெரிவித்துள்ளார்.