• Sat. Feb 15th, 2025

முட்டம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் கிளை

குமரி முட்டம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் கிளை மருத்துவமனை கன்னியாகுமரியில் பங்குத்தந்தை அருட்பணி உபால்ட் அர்சிப்பு.

குமரி முட்டம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை குமரி மாவட்டத்தில் முதல் தர மருத்துவ கல்லூரியாகவும், மருத்துவ கல்லூரியாகவும் அண்மையில் திறக்கப்பட்டது.

கிறிஸ்தவ மிஷனரி அமைப்பின் உலகின் 13 நாடுகளில் கல்வி மற்றும் மருத்துவமனைகளை செயல்படுத்தி வரும் அமைப்பின் சார்பாக முட்டம் (லைட் ஹவுஸ்) பகுதியில் மருத்துவ கல்லூரி, தாதியர் கல்லூரி மற்றும் மருத்துவதுறை சார்ந்த பல்வேறு துறைகளை கொண்டுள்ள குமரி முட்டம் மருத்துவக் கல்லூரி, மருத்துவ மனையின் மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டத்தில் முதல் இணை மருத்துவ மனை இன்று கன்னியாகுமரியில் கல்லூரி டீன் டாக்டர்.என்.மோகன் கிளை மருத்துவ மனையை திறந்து வைத்தார்.

கன்னியாகுமரியில் உள்ள புனித ஜோசப் தொடக்கப் பள்ளியில், பயிலும் அனைத்து மாணவர்கள் சுகவீனம் ஏற்பட்டால், பரிசோதனை மருந்து என அனைத்தும் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்த டீன் டாக்டர்.மோகன் புதிய மருத்துவ கல்லூரி மக்கள் நலன் கருதி எதிர் வரும் (டிசம்பர் 31.12.25) வரை அனைத்து குழந்தை பேருகாலங்களுக்கு இலவச மருத்துவம் செய்ய இருப்பதை டீன் டாக்டர் மோகன் தெரிவித்தார்.

கன்னியாகுமரி அலங்கார உபகார மாதா தேவாலயம் முற்றத்தில் நடைபெற்ற குமரி முட்டம் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையின் கிளையை, பங்கு தந்தை அருட்பணி உபால்ட் ஜெபம் செய்து அர்ச்சித்து தொடங்கி வைத்ததுடன் சிலரின் நோய் பரிசோதனை செய்தனர்.

கன்னியாகுமரியில் திறக்கப்பட்ட குமரி முட்டம் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையின் கிளை திறப்பு விழா நிகழ்வில்.

மருத்துவ கல்லூரியின் துணப்பொது மேலாளர் முனைவர்.அழகேசன், பேராசிரியர் சுரேந்திரன், கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், கன்னியாகுமரி துணை ஆய்வாளர் மகேஷ் குமார்,பங்கு பேரவை துணைத்தலைவர் டாலன் டிவோட்டா, செயலாளர் ஸ்டார்வின், உறுப்பினர்கள் மெக்ஸி,ராஜா உட்பட ஏராளமான பொது மக்களும் கலந்து கொண்டனர்.