

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்ட மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வோம் என பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 104வது ஜெயந்தி தினத்தை முன்னிட்டு, மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு பாஜக தலைவர் அண்ணாமலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா ஆகியோர் இருந்தனர்.
பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அண்ணாமலை, மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரைச் சூட்ட மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வோம் என்றார்.
