

அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் செல்லூர் ராஜூ, ஆர் பி உதயகுமார், விஜயபாஸ்கர், ராஜன், செல்லப்பா ஆகியோர் மதுரை கோரிப்பாளையம் சந்திப்பில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசியபோது, தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகியோரின் சார்பாக நாங்கள் அனைவரும் இன்று தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்துள்ளோம் என்றார்.
