பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118 ஆம் ஆண்டு ஜெயந்தி மற்றும் 63 ஆம் ஆண்டு குருபூஜை முன்னிட்டு.

தேனி மாவட்டம் பெரியகுளம், ஆண்டிபட்டி கானா விளக்கு போடி உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் திருவுருவ சிலைக்கு அதிமுக சார்பாக நகர செயலாளர் பழனியப்பன் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பெரிய வீரன் ஆகியோர் தலைமையில் கட்சி நிர்வாகிகள் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர் இதில் அதிமுக கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

அதைத் தொடர்ந்து தமிழக வெற்றிக்கழக தேனி வடக்கு மாவட்டம் சார்பாக வடக்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் தலைமையில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
இதைத் தொடர்ந்து தேனி மாவட்டம் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட செயலாளர் ராஜபாண்டி தலைமையில் கட்சித் தொண்டர்கள் இணைந்து மரியாதை செலுத்தினர்.













; ?>)
; ?>)
; ?>)