• Fri. Jan 17th, 2025

மகனை துடிதுடிக்க வெட்டி கொலை

ByG.Suresh

Dec 20, 2024

தாய் கண்ணெதிரே மகனை துடிதுடிக்க வெட்டி கொலை செய்த மர்ம கும்பல்! சிவகங்கையில் குடியிருப்பு பகுதியில் நடந்த கொலை சம்பவத்தால் பெரும் பரபரப்பு!

சிவகங்கையில் தாயுடன் சேர்ந்து பூக்கடை நடத்தி வரும் வெங்கடேஷ் என்ற இளைஞர் தனது வியாபாரத்தை முடித்துவிட்டு, சிவகங்கை அருகே இருக்கக்கூடிய வாணியங்குடியில் உள்ள தனது இல்லத்துக்கு தாயுடன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது எதிரே காரில் வந்த மர்ம கும்பல் இருசக்கர வாகனத்தில் வந்த வெங்கடேசன் மீது இடித்து கீழே தள்ளிவிட்டு தாய் கண்ணெதிரே வெங்கடேசை துடி துடிக்க கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்த சம்பவம் சிவகங்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குடியிருப்பு பகுதியில் வீடுகளுக்கு அருகில் நடந்ததால் சிவகங்கை நகர் காவல் துறையினர் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.