• Tue. Feb 18th, 2025

மான்ஃபோர்ட் பள்ளியில் கிறுஸ்துமஸ் கொண்டாட்டம்

ByG.Suresh

Dec 21, 2024

மான்ஃபோர்ட் பள்ளியில் நடைபெற்ற கிறுஸ்துமஸ் கொண்டாட்டத்தில் மாணவ, மாணவியர்களின் கண் கவர் நடனம் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அருகே செயல்படும் பள்ளியில் கிறுஸ்துமஸ் கொண்டாட்டம் வெகு விமர்ச்சியாக நடைபெற்ற நிலையில் மாணவ, மாணவியர்களின் கண்கவர் நடனம் அனைவரையும் ஈர்த்தது.

சிவகங்கையை அடுத்துள்ள சுந்தரநடப்பில் மத்திய அரசு பாடத்திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் அரையாண்டு தேர்வு முடிந்து இன்றுடன் விடுமுறை அளிக்கப்படவுள்ள நிலையில், வரும் 25 ஆம் தேதி கிறுஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, சிவகங்கை மறை மாவட்டம் மேதகு ஆயர் லூர்து ஆனந்தம் ,
சிவகங்கை தாலுகா காவல் அதிகாரி கணேஷ் மூர்த்தி தலமையில் பள்ளி வளாகத்தில் உள்ள மைதானத்தில் கிறுஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.

இதில் மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றதுடன் மாணவ, மாணவிகள் ஒரே மாதிரி சாண்டா கிளாஸ் உடையனிந்து பாடலுக்கேற்ப நடனமாடியது அனைவரையும் ஈர்த்ததுடன், கிறுஸ்து பிறப்பை அறிவுருத்தும் விதமாக ஆடிய நடனமும் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. மேலும் இந்த நிகழ்ச்சியில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்த மாணவ, மாணவிகளுக்கு கிறுஸ்துமஸ் பரிசை மேதகு ஆயர் தனது கைகளாள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். விழா ஏற்பாடுகளை பள்ளி தலைமை சகோதரர் இக்னேஷியஸ் தாஸ் செய்திருந்தார். இந்நிகழ்ச்சியினை ஏராளமான மாணவ, மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கண்டுகளித்தனர்.