• Sun. Jan 11th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

புளியங்குடியில் குடிபோதையில் குடிமகன் கொலை

Byஜெபராஜ்

Dec 12, 2021

தென்காசி மாவட்டம் புளியங்குடி குடிபோதையில் குடிமகன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தென்காசி மாவட்டம் புளியங்குடி டிஎன் புதுக்குடி கிணற்று தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் முருகேசன்(58). இவர் குடிபோதையில் உளறி கொண்டிருந்துள்ளார் அப்போது அந்த வழியாக வந்த புளியங்குடி காந்தி பஜார் முடுக்கு தெருவை சேர்ந்த நாராயணன் மகன் சுந்தரம் (63)முருகேசனிடம் வாய்த் தகராறு செய்துள்ளார். இதனால் இருவருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது


பின்பு இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது அதில் முருகேசனை சுந்தரம் தள்ளியுள்ளார். அதனால் நிலை தடுமாறி கீழே விழுந்த முருகேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொலை சம்பவம் குறித்து தகவலறிந்து புளியங்குடி இன்ஸ்பெக்டர் ராஜாராம்சப்-இன்ஸ்பெக்டர்கள் பரத் லிங்கம் யோபு சம்பத் காவலர்கள் குட்டி ராஜ் திருப்பதி சிறப்பு காவலர் மருதபாண்டியன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்பு குடிபோதையில் கொலை செய்த சுந்தரத்தை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.