விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன் புத்தூர் கிராமத்தில் மேலூர் துரைசாமிபுரத்தில்13 சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட முப்பிடாதி அம்மன் கோவில் திருவிழா கடந்த 2ம் தேதி அதிகாலை கொடியேற்றுடன் துவங்கியது.

இதைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் வீதி உலா நடைபெற்றது கோவில் நிர்வாகம் சார்பில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. நேத்து தொடர்ந்து பத்தாம் நாள் திருவிழா இன்று 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி தங்களுடைய நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

விழா ஏற்பாடுகளை கோவில் தலைவர் வெங்கடேசன் செயலாளர் . முருகன் பொருளாளர் ஜெயராமன் மற்றும் கோவில் நிர்வாகி கனகராஜ் விழா கமிட்டினர் செய்திருந்தனர். பாதுகாப்பு பணியில் தளவாய்புரம் காவல் நிலையா ஆய்வாளர் ரமேஷ் கண்ணன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.