• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

முதுமலை புலிகள் காப்பகத்தில் . யானைகள் கணக்கெடுப்பு பணி துவங்கியது

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள உள் மண்டலம் மற்றும் வெளி மண்டல வனப்பகுதியில் யானைகள் கணக்கெடுக்கும் பணி துவங்கியது. யானைகள் கணக்கெடுப்பு பணியில் 228 வன ஊழியர்கள் ,50 தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர். இன்று முதல் 19ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு நடைபெறுகிறது. நேர்கோட்டு பாதை கணக்கேடுப்பு முறை ,பிளாக் கணக்கெடுப்பு முறை, குளம் குட்டை கணக்கெடுப்பு முறை ஆகிய மூன்று வகையான முறையில் யானை கணக்கெடுப்பு பணி நடைபெறுகிறது…
மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம் உள் மண்டலம் மற்றும் வெளி மண்டல வனப்பகுதியில் நூற்றுக்கணக்கான யானைகள் வாழ்ந்து வருகிறது. அவ்வாறு வாழக்கூடிய யானைகள் குறித்த கணக்கெடுப்பு ஆண்டுதோறும் பருவ மழைக்கு முன்பு கணக்கெடுப்பு பணி நடைபெறும்.
யானைகள் குறித்த கணக்கெடுப்பு பணியில் ஆண் யானைகள் குறித்த கணக்கெடுப்பு ,பெண் யானைகள் எவ்வளவு உள்ளன, குட்டிகள் அதிகரித்துள்ளதா அல்லது குறைந்துள்ளதா என்பதை கண்டறியவும் யானைகளுக்கு தேவையான உணவு, தண்ணீர் தேவைகளை பூர்த்தி செய்யவும் ஆண்டுதோறும் யானைகள் குறித்த கணக்கெடுப்பு பணி நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டிற்கான யானைகள் குறித்த கணக்கெடுப்பு பணி இன்று முதல் 19ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு நடைபெறுகிறது. யானைகள் கணக்கெடுக்கும் பணியில் 228 வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் ,வன ஊழியர்கள் மற்றும் 50 தன்னார்வலர்களும் கலந்து கொண்டுள்ளனர். இந்தாண்டு யானைகளை கணக்கெடுக்கும் பணியின் போது மூன்று விதமான முறைகள் பின்பற்றப்பட உள்ளது. அதன்படி நேர்கோட்டு பாதை கணக்கெடுப்பு முறை, பிளேக் கணக்கெடுப்பு மற்றும் குளம், குட்டை பகுதிகளில் யானைகள் நடமாட்டம் குறித்த மூன்று வகையான முறையில் யானைகள் கணக்கெடுப்பணி நடைபெறுகிறது.
இதன் மூலம் கடந்த ஆண்டை விட யானைகள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதா அல்லது குறைந்துள்ளதா என்பதை கண்டறியவும். யானைகள் ஒரு பகுதியில் இருந்து மற்ற பகுதிக்கு இடம்பெயர்ந்து சென்றுள்ளதை அறிந்து கொள்ளவும் இந்த கணக்கெடுப்பு பணி நடைபெறுகிறது.