தெய்வத்தின் பூமி என காலம், காலமாக ஒரு காரண பெயருடன் திகழும் கேரள மாநிலம் இயற்கை அமைப்பில் மேடும் பள்ளமான பகுதி என்பதே மலையாளம் பேசும் நிலப்பரப்பு என்பதாக இயல்பானது.
வயநாடு பகுதியில் குறிப்பாக மூன்று இடங்களில் பெய்த பெரும் மழையால் ஏற்பட்ட மண் சரிவு. இதில் பாதிக்கப்பட்ட மக்களின் அந்நிலையை,ஆபத்தை, சேதத்தை பற்றிய நிலைக்கு என்ன நடவடிக்கை எடுப்பது என்று திக்கும், திசையும் தெரியாத நிலையில் கேரள அரசு மீட்பு பணியில் அரசின் இயக்கமும், தன்னார்வலர்கள் பாதிப்பில் சிக்கிய மக்கள் மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, வயநாடு மக்களின் துயருக்கு ஒன்றிய அரசின் உடனடி செயல்பாடு என்ன என்ற நிலையை கடந்து. நாடாளுமன்ற கூட்டத்தில் கேரள மாநிலத்தில் உள்ள நாடாளுமன்ற மக்கள் உதவிகுறல் எழுப்பிய போது. உள்துறை அமைச்சர் அமித்ஷா சொன்ன பதில். வயநாடு மக்களின் பாதிப்புக்கு மோடி தலைமையிலான அரசு எத்தகைய உதவிகள் செய்யும் என்பதை கடந்து, கேரள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமித்ஷா சொன்னது.

நாங்கள் ஏழு நாட்களுக்கு முன்பே எச்சரிக்கை அறிவிப்புகள் கொடுத்தோம், முதல்வர் பிரனாய் விஜயன் தான் உரிய நடவடிக்கை எடுக்க வில்லை என குற்றம் சாட்டுவதிலே குறியாக இருந்த நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கூற்றுக்கு கேரள முதல்வர் தெரிவித்த எச்சரிக்கை என்பது “மஞ்சள்”மற்றும் “ஆரென்ஞ்” எச்சரிக்கை மட்டுமே. ஆனால் பெய்த மழை இதுவரை பெய்த மழை அளவை விட குறைந்த கால அளவில் பெய்தது மட்டும் அல்ல. இரவில் மக்கள் தூங்கி கொண்டிருந்த போது மழை மட்டுமே அல்ல மண் சரிவும்,இதுவரை வயநாடு பகுதியில் காணத பேர் அழிவு. மக்களின் பதிப்பிலும் அரசியல் செய்யாதீர்கள் என பாஜக அரசுக்கு கேரள முதல்வர் அவரது கண்டனத்தை தெரிவித்து விட்டு நிலச்சரிவு ,மழை பாதிப்பு பகுதிகளை நேரில் ஆய்வு செய்ய சென்றார்.
வயநாடு பெரும் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவு பகுதிகளை கடந்த 31_ம் தேதியே நேரில் பார்வையிட , நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும்,அவரது தங்கை பிரியங்கா காந்தியும் செல்ல திட்டமிட்டனர். ஆனால் பயணப் பகுதிகள் வாகன இயக்கத்திற்கு உகந்ததாக இல்லாத நிலையில். கடந்த (ஜூலை_1)ம்தேதி தங்கை பிரியங்கா காந்தி, காங்கிரஸ் செயலாளர் வேணு கோபால், கேரள மாநில காங்கிரஸ் தலைவர் உடன் செல்ல. ராகுல் காந்தி முதலில் முகாமில் தங்கியிருப்பவர்களை சந்தித்து அவர்களது துன்பத்தை,அப்போதைய முகாமில் உள்ள தேவைகளை ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் கேட்டரிந்தனர்.முகாமில் பெற்றோர்களை இழந்த குழந்தைகளை வாஞ்சையுடன் கட்டி அணைத்து குழந்தையின் கண்ணீரை துடைத்து விட்டார் . பேரிடர் பணியில் ஈடுபட்ட இராணுவ வீரர்களின் மனித நேயம் நிறைந்த பணிகளை பாராட்டினார்.
எனது தந்தை இறந்த போது நாங்கள் இருவரும் எவ்வளவு துக்கமடைந்தோமோ அதே துக்கத்தை வயநாட்டை பார்த்து அடைந்தேன். இந்திய மக்கள் அனைவரும் வயநாடு மக்களுக்காக துணை நிற்கின்றார்கள் என தெரிவித்தார்.
“வயநாடு”நிலச்சரிவு சம்பவத்தை வைத்து அரசியல் செய்ய விரும்பவில்லை”
இரண்டு நாட்களாக வயநாடு பகுதியில் உள்ள பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று துன்பப்படும் மக்களின் துயரில் ஒவ்வொரு குடும்பத்தின் உறுப்பினர் போல் இணைத்து விட்டார்கள் ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும்.

இராணுவத்தின் உன்னத பணி வயநாட்டின் முண்டகை மற்றும் சூரல்மலா பகுதிகள் நிலச்சரிவில் அங்கிருந்த பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் இராணுவத்தின் பெய்லி பாலம் 17 மணி நேரம்,50 நிமிடங்களில் 110 அடி நீளம் இரும்பு பாலத்தை இந்திய ராணுவம் அமைத்து சாதனைப் படைத்தது.இதில் 24 டன் எடை வரையிலான வாகனங்களை இயக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. (இரண்டாம் உலக போரின் போது பெய்லி என்னும் பொறியாளரால் அமைக்கப்பட்டதாம் இந்த இரும்பு பாலம் அதனால் தான் இன்று வரை இந்த இரும்பு பாலம் பெய்லி பெயராலே இன்றும் அழைக்கப்படுகிறது)

இன்று மழை சற்றே நின்றுள்ளதால்,மண் இடிபாடுகளில் சிக்கியுள்ள சடலங்களை மீட்கும் பணியில் அதிக எண்ணிக்கையில் உடல்கள் மீட்க்கப்படுவதால் காணாது போனவர்கள் என்பதை கணக்கிட உதவும் என தேடுதல் பணியில் உள்ளவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியும் கடந்த மூன்று நாட்களாக வயநாட்டையே சுற்றி, சுற்றி வருகிறனர்.

வயநாட்டில் சொந்த வீடுகளை இழந்த 100_பேர்களுக்கு காங்கிரஸ் கட்சியின் சார்பில் வீடு கட்டி தருவோம் என செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இனியாவது இயற்கையை சிதைக்காது. தங்களின் தொழில் லாபத்தை கவனத்தில் கொள்ளாது இயற்கையை பாது காப்பது நாளைய நம் சந்ததிகளுக்கு விட்டு செல்வது இன்றைய சமுகத்தின் ஒவ்வொரு வருவின் கடமை என உணர்வோம் என இன்றைய மனித சமுகம் உறுதி எடுப்போம்.
