• Mon. Oct 14th, 2024

தேனி தொகுதிக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினர் எம்.பி. ப.ரவீந்திரநாத்

தேனி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து பயணியர் நிழற்குடை, மேல்நிலைநீர்த்தேக்கத் தொட்டி, வகுப்பறை கட்டிடம் திறந்து வைத்து மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்றுசக்கர வாகனம் வழங்கிய தேனி எம்.பி. ப.ரவீந்திரநாத்.

தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடை, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, வகுப்பறை கட்டிடம் ஆகியவற்றை தேனி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத் நேற்று திறந்து வைத்தார். மேலும் அதே நிதியிலிருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்றுசக்கர வாகனமும் வழங்கினார்.

தேனி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து தென்கரை பேரூராட்சிக்குட்பட்ட ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கல்லூரி விலக்கில் ரூபாய் 7 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடை, சங்கராபுரம் ஊராட்சி வெம்பக்கோட்டை கிராமத்தில் 7 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடை, தங்கம்மாள்புரம் ஊராட்சிக்குட்பட்ட வாய்க்கால்பாறையில் 10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 60 ஆயிரம் லிட்டம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி, பாம்பாடும்பாறை புதூரில் 4 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளை கிணறு மின்மோட்டார் மற்றும் பைப்லைன், நாராயணத்தேவன்பட்டியில் 9.70 லட்சம் மதிப்பீட்டில் 60 ஆயிரம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியும், அத்தொட்டியிலிருந்து கிராம சேவை மைய கட்டிடம் வரை 4.30 லட்சம் மதிப்பீட்டில் பைப் லைனும், உப்புக்கோட்டை ஊராட்சி போடேந்திரபுரம் இந்து ஆரம்ப பள்ளியில் 14 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடமும் கட்டப்பட்டுள்ளது.

தேனி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து கட்டப்பட்ட வளர்ச்சி திட்டப்பணிகளை தேனி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத் அந்தந்த பகுதிகளுக்கு சென்று மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். மேலும் அதே நிதியிலிருந்து தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச மூன்று சக்கர வாகனங்களையும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.எம் சையதுகான், மாவட்டக் கழக துணைச் செயலாளர் முருக்கோடை ராமர், ஒன்றிய செயலாளர்கள் கடமலை-மயிலை கொத்தாளமுத்து, தர்மராஜ், ஆண்டிபட்டி லோகிராஜன், கம்பம் இளையநம்பி, போடி சற்குணம், சின்னமனூர் விமலேஸ்வரன், சின்னமனூர் நகர செயலாளர் கண்ணம்மாள், கார்டன் ராஜேந்திரன், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் பிரிதாநடேஷ், பெரியகுளம் நகர துணை செயலாளர் அப்துல்சமது, தாமரைகுளம் பேரூர் செயலாளர் பழனிவேல், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் கள்ளிப்பட்டி சிவகுமார், ஒன்றிய இளைஞரணி செயலாளர் செல்லப்பாண்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *