ஜெயங்கொண்டம் அருகே பெரியாதுக் குறிச்சி கிராமத்தில். புலி நடமாட்டம், பொதுமக்கள் அச்சம், காவல் துறையினர் சம்பவ இடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு விசாரணை செய்து வருகின்றனர். வனத்துறையினர் புலியின் கால் தடங்கலை படி எடுத்து சம்பவ இடத்தில் ஆய்வு செய்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் பெரியாத்துக்குறிச்சி கிராமத்தில். நேற்று மாலை அதே கிராமத்தைச் சேர்ந்த பெரியாத்துகா குறிச்சி கூட்டுறவு சங்க தலைவர் குமார் மற்றும் விவசாயியான பாலகிருஷ்ணன் ஆகியோர். அப்பகுதி அய்யனார் கோவில் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது இருவரும் இரண்டு புலிகளை முந்திரி காட்டு பகுதியிலிருந்து அருகில் உள்ள கரும்பு தோட்டத்திற்கு கடந்து செல்வதை பார்த்து உள்ளனர்.அதிர்ச்சி அடைந்து இது குறித்து ஆண்டிமடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் இதுகுறித்து தகவல் அறிந்து வனத்துறையின் வனவர் பாண்டியன் தலைமையில் வனத்துறையினர்.நேற்று இரவு 9 மணி அளவில் சம்பவயிடம் வந்து பார்வையிட்டனர். ஆண்டிமடம் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் மழை பெய்தால். புலி நடமாடியதாக கூறப்படும் பகுதி முந்திரி காடு மற்றும் கரும்பு தோட்டங்களாக உள்ளதால் புலிகளின் கால் தடங்கலை படி எடுக்க வனத்துறையினர் தீவிர முயற்சி செய்து சில இடங்களில் சந்தேகத்திற்கு இடமான கால் தடங்கலை நவீன உபகரணங்கள் கொண்டு படி எடுத்தனர்.அப்போது குட்டி புலிகளின் கால் தடங்களை போல் பல இருந்தது அதையும் படி எடுத்துக் கொண்டு தொடர்ந்து வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் பெரியாதுக் குறிச்சி கிராமப் பகுதியில் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இரண்டு பெரிய புலிகள் மற்றும் குட்டி புலிகளின் கால் தடங்கல் உள்ளதாக கூறப்படுவதால்.
அரியலூர் மாவட்ட எல்லை பகுதியிலான பெரியாத்துக் குறிச்சி, சின்ன ஆத்து குறிச்சி, விழுதுடையான், ஸ்ரீராமனை நாகமந்தல்.மற்றும் கடலூர் மாவட்ட எல்லையான ராஜேந்திர பட்டினம் உட்பட பல்வேறு கிராமங்களில் பொதுமக்களிடையே அச்சம் நிலவுகிறது.