• Thu. Oct 8th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

குடியிருப்பு பகுதியில் மலை பாம்பு சிக்கியது

ByKalamegam Viswanathan

Apr 18, 2025

குடியிருப்பு அதிகம் உள்ள பகுதியில் வாய்க்காலில் 5 அடி நீளம் உள்ள மலை பாம்பு சிக்கியது
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தேவி நகர் மணி இம்பாலா தியேட்டர் எதிரே உள்ள பகுதியில் வாய்க்கால் ஒன்று சொல்கிறது.இது குடியிருப்பு அதிகம் உள்ள பகுதியாகும்.அந்த வாய்க்கால் பகுதியில் சுமார் 5 அடி நீளம் உள்ள மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து கொண்டு இருப்பதை கண்டு அப்பகுதி மக்கள் உடனடியாக அதே பகுதியில் பாம்பு பிடி வீரரான சகாதேவனை தொடர்பு கொண்டு மிகப்பெரிய அளவில் பாம்பு ஒன்று என தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்துக்கு வந்த பாம்பு பிடி வீரர் சகாதேவன் சுமார் 5 அடி நீளம் உள்ள மலைப்பாம்பை லாபமாக பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் பத்திரமாக விடுவித்தார்.குடியிருப்பு பகுதியில் 5 அடி நீளம் உள்ள மலைப்பாம்பு ஒன்று சிக்கியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.