• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மாணவர்களை வரவேற்ற மோட்டு பட்லு பொம்மைகள்

ByA.Tamilselvan

Jun 13, 2022

கோடை விடுமுறைக்கு பின்னர் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டது. அதன்படி மதுரை மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் இன்று திறக்கப்பட்ட நிலையில் பள்ளி மாணவர்களை அந்தந்த பள்ளிகளில் வித்தியாசமான முறையில் வரவேற்றனர்.
இந்நிலையில் மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் குழந்தைகளை கவரும் மோட்டு, பட்லு பிரமாண்டமான பொம்மைகள் வரவேற்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து பள்ளிக்கு வருகை தந்த மாணவ மாணவியர்களை மோட்டு பட்லு பொம்மைகள் கைகொடுத்து வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர்.
தொடர்ச்சியாக பள்ளியில் அளிக்கப்பட்ட வித்தியாசமான வரவேற்பை பார்த்த மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு மோட்டு பட்லு பொம்மையோடு கட்டி தழுவியும், அதனுடன் விளையாடியபடி நடனமாடி கொண்டாடினர்.
இதனை தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியர் திவ்யநாதன் தலைமையில் ஆசிரியர்கள் மாணவ மாணவிகளுக்கு ரோஜா பூக்கள் மற்றும் சாக்லேட்கள் மற்றும் விவேகானந்தரின் கை அடக்க புத்தகங்களையும் வழங்கி உற்சாகமாக வாழ்த்தி வரவேற்றனர்.
இதனையடுத்து நடைபெற்ற கடவுள் வழிபாட்டில் மாணவர்கள் கலந்துகொண்டனர். அப்போது மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பல்வேறு அறிவுரைகள் வழங்கினா். இதனையடுத்து மாணவர்கள் உற்சாகத்துடன் பள்ளிக்கு சென்றனர்.
முதல்நாள் பள்ளி திறப்பு என்றாலே சோர்வுடன் வருகைதரும் மாணவர்களை உற்சாகப்படுத்த ஊமச்சிகுளம் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் முன்னெடுத்த வித்தியாசமான முயற்சிக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்துக்கொண்டனர்.