


வாகன ஓட்டுனர்கள் பேரவையின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் கன்னியாகுமரியில் இன்று தனியார் விடுதியில் நடைபெற்றது.
பேரவையின் தலைவர் ஆரணி குணசேகரன் தலைமை தாங்கினார்.
மாநில பொதுச் செயலாளர் சதாசிவம்,பொருளாளர் ஞானப்பிரகாசம்,
நிர்வாகிகள் ஜினோ பரமசிவம்,கருப்பையா, பாலகிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றார்கள்.


கூட்டத்தில், தமிழகத்தில் பிற மாநில சுற்றுலா வாகனங்கள் உரிய ஆவணங்கள் இன்றி இயங்குவதற்கு தடை விதிக்க வேண்டும். சுற்றுலா வாகனங்களுக்கு கூடுதல் இருக்கை அனுமதி வழங்கவேண்டும்.
“ஆன்லைன்” அபராதம் விதிப்பை தடுக்க வேண்டும். சுங்கச்சாவடி கட்டணம் வரும் ஏப்ரல் 1_ம் தேதி முதல் உயர்த்த போவதாக அறிவிப்புகள் வந்துகொண்டிருக்கிறது. சுங்கச்சாவடி கட்டணம் இப்போது மிகவும் உயர்வாக உள்ள நிலையில் மீண்டும் உயர்த்துவது என்பது ஒன்றிய அரசின் துரோகம். இப்போதே மோட்டார் வாகனங்களின் உதிரி பாகங்கள் மற்றும் டயர் விலை அதிகரித்து வரும் நிலையில். மத்திய அரசின் ஜிஎஸ்டி கொள்ளை, அனைத்து நிலை மக்களை வெகுவாக பாதித்து வரும் நிலையில்.
டோல்கேட் கட்டணம் உயர்வு ஏற்புடையது அல்ல. டேல்கேட் கட்டண உயர்வை எதிர்த்து சென்னைமுதல்,குமரி வரை உள்ள அனைத்து டோல் கேட் முன்,வாகன ஓட்டுனர்கள் பேரவையின் சார்பில் சென்னையில், அமைப்பின் தலைவர் ஆரணி குணசேகரன் தலைமையிலும். ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஒவ்வொரு மாவட்ட தலைவர்கள் தலைமையில், வாகன ஓட்டுனர்கள் சங்கம் உறுப்பினர்கள்,பொறுப்பாளர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக வாகன ஓட்டுனர்கள் சங்கத்தினர் கூட்டாக செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

