• Wed. Apr 23rd, 2025

புலியை சுற்றி வளைத்த செந்நாய் கூட்டம், ஒரு வழியாக தப்பி சென்ற புலி…..

ByG. Anbalagan

Mar 26, 2025

கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் தற்பொழுது அதிகளவிலான புலிகள் தென்படுகின்றன. அவ்வாறு புலி ஒன்று வனப்பகுதிக்குள் நடந்து சென்றது. புலியைப் பார்த்த சுமார் 20க்கும் மேற்பட்ட செந்நாய்கள் புலியை சுற்றி வளைத்தன.

செந்நாய் கூட்டமம் சுற்றி வளைப்பதை பார்த்த புலி நீண்ட நேரமாக அங்கும் இங்குமாய் ஓடியது. செந்நாய் கூட்டம் புலியை விடாமல் சுற்றி வளைத்தது. நீண்ட நேரத்துக்கு பிறகு ஒரு வழியாக அந்தப் பகுதியில் இருந்து புலி  தப்பி சென்றது.