• Tue. Dec 16th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

அடையாளம் தெரியாத வாகனம் மோதி தாய்க் குரங்கு குட்டி குரங்கு பலி

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அரசு மருத்துவமனை முன்பாக அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி தேயிலைத் தோட்டம் அருகில் விளையாடிக் கொண்டிருந்த குரங்கு கூட்டம் சாலையைக் கடப்பதற்காக தனது குட்டியுடன் சென்ற குரங்கினை அடையாளம் தெரியாத வாகனம் பலமாக மோதி சென்றதில் சம்பவ இடத்திலேயே தாய்க் குரங்கு சம்பவ இடத்தில் பலி குட்டி குரங்கு கால் தலையில் காயம் ஏற்பட்டு கிடந்துள்ளது அவ்வழியாக வந்த சமூக ஆர்வலர்கள் சுரேஷ்குமார் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார் குட்டி குரங்கு சுமார் ஒரு மணி நேரமாக வலியால் துடித்து கொண்டிருந்த.

து கால்நடை மருத்துவரை அணுகி குட்டி குரங்கினை காப்பாற்றி விட முயற்சி செய்யப்பட்டது சுமார் 1:30 மணி நேரம் காயங்களால் அவதியுற்ற குரங்கு இறந்தது அப்பகுதியில் வசித்து வரும் குடியிருப்பு வாசிகள் சாலையில் சிதறி கிடந்த ரத்தத்தை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்தனர் சுமார் 1:30 மணி நேரம் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த குட்டி குரங்கை காப்பாற்ற முடியாத ஏக்கத்தில் பொதுமக்கள் கவலையுடன் சென்றனர் அதிவேகமாக வரும் வாகனங்களால் அவ்வப்போது குரங்கு நாய் போன்றவை அவ்வப்போது விபத்து ஏற்பட்டு வருவதால் அப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளன