• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

அதிமுக சார்பில் போட்டியிட 2ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விருப்ப மனு

Byவிஷா

Mar 7, 2024

வருகிற நாடாளுமன்றத் தேர்தலில், அதிமுக சார்பில் போட்டியிட 2ஆயிரத்துக்கும் அதிகமானோர் விருப்ப மனு அளித்துள்ளனர்.
அதிமுக சார்பில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு அளிக்க, விருப்ப மனு விநியோகம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுலகத்தில் கடந்த பிப்.21-ம் தேதி தொடங்கியது.
விருப்ப மனுக்களை பொதுத் தொகுதியில் போட்டியிட விரும்புவோர் ரூ.20 ஆயிரம், தனித் தொகுதியில் போட்டியிட விரும்புவோர் ரூ.15 ஆயிரம் கட்டணத் தொகையை செலுத்தி வாங்கினர்.
விருப்ப மனுக்கள் விநியோகம் கடந்த மார்ச் 1-ம் தேதியுடன் நிறைவடைய இருந்த நிலையில், நேற்று வரை நீட்டிக்கப்பட்டது. நேற்று மாலை 5 மணியுடன், விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து திரும்ப வழங்குவதற்கான அவகாசம் நிறைவடைந்தது. அதன்படி மொத்தம் 2 ஆயிரத்து 475 பேர் விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து அளித்துள்ளனர்.
இந்த விருப்பு மனுக்கள் அடிப்படையில் மாவட்ட செயலாளர்களுடன், கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி கலந்தாலோசித்து வேட்பாளர்களை அறிவிக்க இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.