• Tue. Feb 18th, 2025

பெங்களூரைத் தொடர்ந்து தமிழக கோவில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

Byவிஷா

Mar 7, 2024

பெங்களூரு ராமேஸ்வரம் கபே ஹோட்டலில் ஏற்பட்ட வெடிகுண்டு விபத்தைத் தொடர்ந்து, தமிழக கோவில்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக கோயில்களில் விரைவில் வெடிகுண்டு வெடிக்கும் என்று பெங்களூரு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மிரட்டல் குறித்து தமிழக காவல்துறைக்கு பெங்களூரு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மிரட்டல் வந்த மின்னஞ்சலைப் பெற்று சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். அண்மைக்காலங்களால் தமிழகம் மற்றும் கர்நாடகாவில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவங்கள் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.