• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சரக்கு ரயிலின் 10க்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம் புரண்டு விபத்து..!

Byவிஷா

Dec 11, 2023

செங்கல்பட்டு அருகே சரக்கு ரயிலின் 10க்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியது.
தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த சரக்கு ரயில் செங்கல்பட்டு காவல் நிலைய ரயில்வே கேட் பகுதியில் தடம் புரண்டு கோர விபத்து ஏற்பட்டது. ரயில் பெட்டிகளின் பாரம் தாங்காமல் தண்டவாளம் உடைந்து 10க்கும் மேற்பட்ட பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கியது.
தடம் புரண்ட பெட்டிகளை அப்புறப்படுத்தி தண்டவாளத்தை சீரமைக்கும் பணியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ரயில் பெட்டிகளை மீண்டும் தண்டவாளத்தை தூக்கி நிறுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இரவு நேரத்தில் இந்த விபத்து ஏற்பட்டதால் ரயில் சேவை பாதிப்பு பெரிதளவாக இல்லை எனலாம். அதே நேரத்தில் சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையிலான மின்சார ரயில்கள் தாமதமாக இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தென்மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வரும் விரைவு ரயில்களும் தாமதமாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.