• Wed. Dec 17th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

நாகர்கோவிலில் மாநகராட்சியின் மாதாந்திரக் கூட்டம்

நாகர்கோவிலில் மாநகராட்சியின் மாதாந்திரக் கூட்டம் மேயர் மகேஷ் தலைமையில் நடைபெற்றது.குமரி மாவட்டத்தின் பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக சாலை வசதிகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.குமரி மாவட்டத்தில் இரட்டை சாலை வசதிகள் இல்லாதால், .நாகர்கோவில் நகர பகுதியில் போக்குவரத்து நெரிசல் என்பது, தினம் எட்டு மணிக்கு தொடங்கும் சாலை போக்குவரத்து இரவு எட்டு மணி வரை நீடிக்கும் நிலையில்.சாலையை விரிவாக்கம் செய்ய முடியாத நிலையில் இருக்கும் சாலைகளில் தடுப்பு ச்சுவர் அமைத்து மாநகராட்சியின் எழில் கொஞ்சும் குமரியில் எழில் தோற்றத்தை தடுப்பு சுவர்கள் மாற்றி வருகிறது என்ற பொது கருத்து பொது மக்கள் மத்தியிலும் உலா வரும் நிலையில். குமரி ஒரு சுற்றுலா மாவட்டம் என்பதால் விடுமுறை தினங்களில் குறிப்பாக அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து ஏராளமான வாகனங்கள்.மாவட்ட எல்லையான களியக்காவிளை பகுதியை கடந்தும் அதன் வேகமும் குறைக்க வேண்டிய கட்டாயத்தையும் வாகன ஓட்டிகளுக்கு ஏற்படுத்துகிறது.
வாகன நெருக்கடிகளை கேமரா மூலம் கண்காணித்து வாகன நெருக்கடி ஏற்படும் இடங்களை கண் காணிக்க வேண்டும் என்ற மாமன்றம் உறுப்பினர்கள் வலியுறுத்தினார்கள்.மேயர் மகேஷ் உடனடியாக இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி கூட்டத்தில் தெரிவித்தார்.