கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் முன்னெடுப்பான ஊர்காவல் கண்காணிப்பு திட்டம் (ஒரு காவலர் இரண்டு -CCTV) மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் ஒத்துழைப்பையும் பெற்று வருகிறது.

இந்தத் திட்டமானது காவல்துறை மற்றும் பொதுமக்கள் இடையே நல்லுறவை ஏற்படுத்துவதுடன் கன்னியாகுமரி மாவட்டத்தை முழுமையான பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரும் வண்ணம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் குறிக்கோளான அனைத்து கிராமங்களிலும் சிசிடிவி என்ற இலக்கை எட்டுவதற்கும் இந்த திட்டம் வழிவகை செய்துள்ளது.
அதன் தொடர்ச்சியாக நேற்று 22-07-2025 தக்கலை உட்கோட்டத்தில் அமைக்கப்பட்ட 124 சிசிடிவி கேமராக்களின் செயல்பாட்டினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள். இந்த சிசிடிவி கேமராக்களை காவல் நிலையத்திலிருந்து கண்காணிக்கும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் தக்கலை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பார்த்திபன் TPS, தக்கலை காவல் ஆய்வாளர் கிறிஸ்டி மற்றும் காவலர்கள் உடன் இருந்தனர்.




