• Sun. May 12th, 2024

‘நாட்டாமை’ தீர்ப்பை மாற்றிய தருணங்கள்

Byவிஷா

Mar 13, 2024

1996ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் முதல் திமுக, அதிமுக என மாறி மாறி அக்கட்சிகளுக்கு ஆதரவு அளித்து வந்த நடிகர் சரத்குமார் தற்போது பாஜகவில் ஐக்கியமாகி உள்ளார். இவர் நாட்டாமையாக மாறி தீர்ப்பை மாற்றிய தருணங்களைப் பார்ப்போம்..,
 1996 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக சரத்குமார் பிரச்சாரம் செய்தார். பின்னர் திமுகவில் ஐக்கியமானார்.
 1998 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் நெல்லையில் களமிறங்கி தோல்வியடைந்தார்.
 2001 ஆம் ஆண்டு திமுக சார்பில் ராஜ்யசபா எம்பி என்று வளர்ந்து வந்த நிலையில், அக்கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2006 ஆம் ஆண்டு அதிமுகவில் சேர்ந்தார்.
 2006 சட்டசபை தேர்தலில் அதிமுகவிற்கு பிரச்சாரம் செய்தார். பின்னர் ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட பிரச்சினைகளால் அதிமுகவில் இருந்து விலகி 2007 ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதி சமத்துவ மக்கள் கட்சியை தொடங்கினார்.
 2011 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து தென்காசி தொகுதியில் சரத்குமாரும், நாங்குநேரி தொகுதியில் எர்ணாவூர் நாராயணனும் வெற்றி பெற்றனர்.
 2016 ஆம் ஆண்டு தேர்தலின் போது அதிமுக கூட்டணியில் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் கமலஹாசனின் மக்கள் நீதி மையமும் சமத்துவ மக்கள் கட்சியும் இணைந்து போட்டியிட்டு எல்லா தொகுதிகளிலும் தோல்வியடைந்தது.
 இந்த நிலையில் நேற்று மார்ச் 12ம் தேதி 2024 ல் தனது சமத்துவ மக்கள் கட்சியை, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவுடன் இணைத்துக்கொண்டார் சரத்குமார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *