தமிழ் சினிமாவின் அம்மா நடிகையாக பிரபலம் அடைந்தவர் நடிகை சரண்யா பொன்வண்ணன். இவர் ஏறக்குறைய அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் அம்மாவாக நடித்துள்ளார்.
இந்நிலையில் இவரது இந்த அம்மா பிம்பத்தை உடைக்கும் முயற்சியில், துணிச்சலான கேங்ஸ்டர் வேடத்தில் நடிக்க வைத்துள்ளார் இயக்குநர் விஷ்ணு ராமகிருஷ்ணன். மேலும் அவர் இந்த திரைக்கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் கச்சிதமாக இருப்பார் என்று தான் உணர்ந்ததாக அவர் கூறியுள்ளார்.
பிரபுதேவாவின் ஊமை விழிகள் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ள இவர் தற்போது இயக்கத்தில் இறங்கியுள்ளார். முதலில் இந்தக் கதாபாத்திரத்தை ஏற்க சரண்யா பொன்வண்ணன் தயங்கியுள்ளார். ஆனால் விஷ்ணு ராமகிருஷ்ணன் கொடுத்த நம்பிக்கையில் இந்தக் கதாபாத்திரத்தை ஏற்று தற்போது சிறப்பாக நடித்து வருகிறார்.
படத்தில் அவருக்கு சண்டைக்காட்சிகளும் உள்ளதாம். குடும்பத்தினருடன் அமைதியாக வாழ்க்கை போகும்போது குடும்பத்திற்கு ஒரு பிரச்சினை வர, அதை தொடர்ந்து அவர் பழைய கேங்ஸ்டராக மாறி பிரச்சினையை தீர்க்கும் வகையில் கதைக்களம் அமைந்துள்ளது. சீரியசான படம் என்றாலும் சென்டிமெண்ட், நகைச்சுவையுடன் படம் அனைத்துத் தரப்பினரையும் கவரும் வகையில் அமைந்துள்ளதாகவும் விஷ்ணு குறிப்பிட்டுள்ளார்.
