ஆந்திராவில் ஜனவரி 8-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ரோடு ஷோ நடத்துகிறார்
.இதற்காக அவர் 8-ம் தேதி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் வருகிறார். அங்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.முன்னதாக மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
இதையடுத்து விசாகபட்டினத்தில் சம்பத் விநாயகா கோயிலில் இருந்து ஆந்திர பல்கலைக்கழகம் சபா வேதிகா சாலையில் ரோடு ஷோ நடத்துகிறார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ள பொதுமக்களுக்கு குடிநீர், வாகன நிறுத்தம், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.