• Thu. Apr 2nd, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

செஸ் விளம்பரத்தில் மோடி படம்- தீர்ப்பு ஒத்திவைப்பு

ByA.Tamilselvan

Jul 28, 2022
செஸ்விளம்பரத்தில் பிரதமர் மோடி படம் இடம்பெறாதது குறித்த வழக்கை மதுரை உயர்நிதிமன்ற  கிளைஒத்திவைத்தது.

சென்னை அருகே மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது.சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் இன்று மாலை நடைபெறும் விழாவில், பிரதமர் மோடி கலந்துகொண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க உள்ளார். இந்த போட்டிக்கான விளம்பர பேனர்களில் பிரதமர் மோடியின் புகைப்படங்கள் இடம்பெறாதது பாஜகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக ராஜேஷ் கண்ணா என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அவர் சார்பில் அவரது வழக்கறிஞர் சண்முகநாதன் தாக்கல் செய்துள்ள அந்த மனுவில், செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்தில் பிரதமர் மோடியின் பெயர், படத்தை சேர்க்கவேண்டும் என கோரிக்கை இந்த மனு மீதான விசாரணை உயர்நீதிமன்ற கிளையில் சற்று முன்பு நடைபெற்றது. குடியரசுத் தலைவர், பிரதமர் கலந்து கொள்ளவில்லை என்றாலும் புகைப்படம் இடம்பெற்றிருக்கலாமே என்று உயர்நீதிமன்ற கிளை தெரிவித்துள்ளது. இதற்கிடையே, இன்றைய நாளிதழில் கூட செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்தில் பிரதமர் படம் வெளியிடப்பட்டுள்ளது என்று கூறிய தமிழக அரசு மோடி படம் இடம்பெறாததற்கு மன்னிட்பு கேட்க வேண்டும் என்ற மனுதாரரின் வாதத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்தில் பிரதமர் படத்தை சேர்க்க கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.