• Sat. Nov 22nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

நவீன மின் எரிவாயு தகன மேடை..,

ByKalamegam Viswanathan

Aug 23, 2025

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் வைகை ஆற்றங்கரையில் உள்ள மயானத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்ற கட்டுமான பணி நிறைவடைந்து மின் எரிவாயு தகன மேடை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.

பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயராமன் பொதுமக்களுக்கு அர்ப்பணித்தார். மூலதன மானிய திட்டத்தின் கீழ் சுமார் 1.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சோழவந்தான் பேரூராட்சி மக்கள் பயன்பெறும் வகையில் நவீன மின் எரிவாயு தகனமேடை கடந்த இரண்டு ஆண்டுகளாக கட்டுமான பணி நடைபெற்று கடந்த சில நாட்களுக்கு முன்பாக பணி நிறைவுற்றது. அதனை தொடர்ந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நேற்று அர்ப்பணிக்கப்பட்டது.

முதல் நாளில் சோழவந்தான் பெரிய கடை வீதி லதா சோழவந்தான் வளையல்கார தெருவை சேர்ந்த சங்கர் ஆகியோரின் சடலங்கள் தகனம் செய்யப்பட்டது. சுமார் ஒரு மணி நேரத்தில் தகனம் செய்யப்பட்ட அஸ்தியை அவர்களது உறவினர்களிடம் வழங்கப்பட்டது. இது குறித்து குட் கேர் என்னோரஸ் சிஸ்டம் பொறியாளர் ரமேஷ் கூறுகையில்.

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்து மின் எரிவாயு தகனமேடை அமைத்து கொடுத்துள்ளோம். சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் நவீன முறையில் மின் எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்டுள்ளது. மிகக் குறைந்த சலுகை விலையில் கட்டணம் பெற்றுக்கொண்டு அதிகபட்சமாக ஒரு மணி நேரத்தில் ஒரு சடலம் முற்றிலுமாக எரியூட்டப்பட்டு அஸ்தி அவர்களது உறவினரிடம் வழங்கப்படும்.

தொடர்ந்து ஒரு வருட காலம் நாங்கள் பராமரிப்பு பணியை மேற்கொண்டு அதன் பிறகு மற்ற நிறுவனத்திடம் பேரூராட்சி ஒப்புதலுடன் டெண்டர் முறையில் மாற்றுவோம் என தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் கவுன்சிலர் கொத்தாலம் செந்தில் வேல் மற்றும் இளநிலை உதவியாளர் கல்யாணசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்