

குழித்துறையில் பாரத் ஜோடா யாத்திரை முதலாம் ஆண்டு நிறைவு விழா- காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்தது.
காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி அவர்கள் 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஏழாம் தேதி கன்னியாகுமரியில் இருந்து பாரத் ஜோடா யாத்திரையை தொடங்கி 2023 ஜனவரி 30 ஆம் தேதி இந்தியா முழுவதும் பல்வேறு முக்கிய நகரங்களை கடந்து நிறைவு செய்தார், அதன் ஓராண்டு நிறைவு விழாவை கொண்டாடும் வகையில் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் வெற்றி பேரணி என்னும் பெயரில் பேரணிகளை நடத்தி வருகின்றனர். அதேபோல நேற்று குழித்துறையில் இருந்து வெட்டுமணி , மார்த்தாண்டம் காந்தி மைதான வழியாக மார்த்தாண்டம் புதிய பேருந்து நிலையத்தில் பேரணி நிறைவு செய்து பேசினர்.இந்நிகழ்ச்சிக்கு குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் டாக்டர். பினுலால் சிங் தலைமை தாங்கினார்,சிறப்பு விருந்தினராக கிளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் கலந்து கொண்டு பேசினார். நிகழ்ச்சியில் மாநில மீனவரணி தலைவர் ஜார்ஜ் ராபின்சன், களியக்காவிளை பேரூராட்சி தலைவர் சுரேஷ், மேல்புறம் வட்டார தலைவர் ரவிசங்கர் ,குழித்துறை நகர தலைவர் வக்கீல் சுரேஷ் ,மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் செல்வகுமார், மாவட்ட இதர பிற்படுத்தோர் பட்ட பிரிவு தலைவர் ஸ்டூவர்ட் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் .

