

கன்னி தெய்வம் கோவில் கொண்டதால் ஊருக்கு கிடைத்த பெருமை மிகுந்த பெயர் கன்னியாகுமரி. கன்னியாகுமரியுடனே இணைந்து வரும் மற்றொரு பெருமைகள், இந்தியாவின் தென்கோடி எல்லை. மூன்று கடல்கள் சங்கம பகுதி, சூரிய உதயம், அஸ்தமனம் காட்சியை தினம் கிழக்கு, மேற்கு திசையில் காணும் இயற்கையின் அற்புதம்.
சூரியனுக்கு தினம் தோறும் பெருமையை சித்திரா பௌர்ணமி அன்று சந்திரன் தட்டி செல்லும் பெருமை.
கன்னியாகுமரி கடல் நடுவே உள்ள பாறையில் 1892-ம் ஆண்டு நரேந்திரன் என்ற இளைஞன் மூன்று நாட்கள் தவமிருந்து, ஆன்மீக ஒளி பெற்று உலகின் கண்களுக்கு சுவாமி விவேகானந்தர் என புகழ் பெற காரணமாக அமைந்த கடற்பாறையில் சுவாமி விவேகானந்தருக்கு நினைவு மண்டபம் கட்ட கல்கத்தாவில் உள்ள ராமாகிருஷ்ண மடம் திட்டம் இட்டு, அதற்கான குழுவின் தலைவராக ஏக்நாத்ரானேடே கன்னியாகுமரி வந்து இப்போது பூம் புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தின் படகு துறை இருக்கும் பகுதியில் இருந்து தூரத்தில் நீலக்கடல் நடுவே இருக்கும் பாறையை கண்ணை இடுக்கி கொண்டு பார்த்த அந்த தினத்திலே அவர் இதயத்தில் நிழலாடியது நினைவு மண்டபத்தின் வடிவம்.

தமிழகத்தின் அன்றைய முதல்வர் பக்தவத்சலத்தை சந்தித்து கடல் நடுவே விவேகானந்தர் நினைவு மண்டபம் எழுப்ப உரிய அனுமதியை குமரி மாவட்ட ஆட்சியர் தருவதற்கு முதல்வர் உதவ வேண்டும் என கோரிக்கை வைத்தபோது, மாவட்ட நிர்வாகத்திடம் முதலில் தடை இல்லா சான்று வாக்குகள் என முதல்வர் தெரிவித்த காரணங்களில் ஒன்று.
சுவாமி விவேகானந்தர் தவம் மேற்கொண்ட அந்த பாறையில் மூன்று நாட்கள் தவம் இருந்தார் என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் அந்த காலகட்டத்தில். குறிப்பிட்ட பாறையில் பல ஆண்டுகளுக்கு முன், கன்னியாகுமரி பகுதி மீனவர்களால் வைக்கபட்ட சிலுவை ஒன்று நிறுவபட்டிருந்தது. (இன்றும் கன்னியாகுமரி மீனவ மக்களால் திருவணை (சிலுவை என்ற சொல் அருகி) என்றே குறிப்பிட்ட பாறையை அடையாளப்படுத்துகிறனர்) கடலுக்குள் மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள், கடலுக்கு செல்லும் போதும், திரும்பி வரும் போது சிலுவையை பார்த்து வணங்குவது ஒரு தொடர் நிகழ்வு.
இயேசு உயிர்ப்பு தினமான”ஈஸ்டர்”நாளில் மீனவர்கள் குடும்பம்,குடும்பமாக கட்டு மரத்தில் சிலுவை பாறைக்கு சென்று பிரார்த்தனை செய்வதும் வழக்கமாக இருந்தது.
குமரியில் ஏக்நாத் ரானடே யின் பணி எளிதாக இல்லாத நிலையில். அன்றைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி யை பார்த்து பிரச்சினையின் தன்மையை சொல்ல, பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி, ஏக்நாத் ரானடே இடம் சொன்ன ஆலோசனை நாடாளுமன்ற உறுப்பினர்கள் 100_பேரிடம் கன்னியாகுமரி கடல் பாறையின் வரலாற்றை குறிப்பிட்டு, நினைவு மண்டபம் கட்ட ஆதரவு தெரிவித்து “கை” எழுத்து வாங்கி வாருங்கள் என தெரிவித்தார்.
பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி காட்டிய திசையில் பயணப்பட்டு ஏக்ராத்நாடேவின் முயற்சி வெற்றி பெற்றது. கன்னியாகுமரி கடல் நடுவே சுவாமி விவேகானந்தர் மண்டபத்தை 1970_ம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 2ம் நாள் தமிழகத்தின் அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி தலைமையில்,அன்றைய பிரதமர் வி.வி.கிரி. சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்தை திறந்து வைத்தார்.
சர்வதேச சுற்றுலா பகுதியான கன்னியாகுமரியில் ஒரு புதிய சுற்றுலா இடமாக விவேகானந்தர் நினைவு மண்டபம் சிறப்பு பெற்றது.கடல் நடுவே படகு பயணம் என்பது தனி சிறப்பானதாக சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கடல் நடுவே உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் கடந்த 52 ஆண்டுகளை கடந்து 53_வது ஆண்டின் தொடக்க தினமான இன்று(செப்டம்பர்_2)ம் நாள் விவேகானந்தர் நினைவு மண்டபம் நிர்வாகம் அதனை கொண்டாடும் வகையில்.
இன்று (செப்டம்பர்_2) விவைகானந்தர் நினைவு மண்டபத்திற்கு முதல் அடி எடுத்து வைத்த கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த சுற்றுலா பயணி சரத்கீர்த்தி முதல் நபர் என விவேகானந்தர் நினைவு மண்டபம் நிர்வாகத்தின் சார்ந்த அடையாள சான்று கொடுக்கப்பட்டது.

கன்னியாகுமரி கடல் நடுவே உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்தை 53 ஆண்டுகளில் பார்வையிட்ட சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 7_கோடியே 20 லட்சத்து 7 ஆயிரத்து 571 பேர் பார்வையிட்டு உள்ளார்கள் என்பது ஒரு மகத்தான ஒரு செய்தியாக உலாவருகிறது.
