• Tue. Mar 3rd, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

தமிழக முதல்வரின் தாய் தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி

ByP.Kavitha Kumar

Mar 4, 2025

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள். இவர் கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் வசித்து வருகிறார். இவருக்கு நேற்று இரவு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் உடனடியாக அவரை சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தயாளு அம்மாள் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரின் உடல் நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தியறிந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்கு விரைந்தார். மேலும், தயாளு அம்மாள் உடல்நிலை குறித்தும், அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.