நீலகிரி மாவட்டம் உதகையில் புதிதாக 499 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 700 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை நேற்று தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு அதிமுகவை சேர்ந்த நீலகிரி மக்களவை உறுப்பினராக இருந்த கே.ஆர் அர்ஜுனன் முயற்சியாலும் அப்போதைய ஆளும் கட்சியாக இருந்த அதிமுக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முயற்சியாலும் இந்த மருத்துவ கல்லூரி மருத்துவமனை அமைக்கப்பட்டதாக கூறி இன்று நீலகிரி மாவட்ட அதிமுக கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் தலைமையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 80 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளதாக கூறும் ஆளும் கட்சியினர் மருத்துவமனையில் போதிய குடிநீர் வசதி செய்து தரவில்லை எனவும், போதிய செவிலியர்களை நியமிக்கவில்லை எனவும் குற்றச்சாட்டினர்.
இதில் முன்னாள் மக்களவை உறுப்பினர் கே.ஆர் அர்ஜுனன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.