• Thu. Sep 19th, 2024

பத்தவச்சிட்டியே பரட்டை!! 70-இல் கலக்கிய திரைப்படம்! நடிகர்களின் சம்பளம்! ..

1970-களின் திரையுலகில் காதல், குடும்ப கதைகளே மேலோங்கி இருந்தன.. 1977ஆம் ஆண்டுக்கு வெளியானது 16 வயதினிலே! திரையுலகின் கதை பிம்பத்தை மாற்றிய திரைப்படம்..

இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் இயக்கத்தில் கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீதேவி போன்றோரின் நடிப்பில் வெளியான படம் 16 வயதினிலே. முழுக்க, முழுக்க கிராமத்து பின்னணியில் உருவான படம் இது! இதில் நடித்த நடிகர்கள் அனைவரும் கதாபாத்திரங்களாகவே வாழ்ந்தார்கள் என்பதும், இப்படத்தில், நடிகர்களுக்கு கொடுக்கப்பட்ட சம்பளமும் குறைவே குறிப்பிடத்தக்கது!

ரஜினிகாந்த்:
பரட்டை எனும் கதாபாத்திரத்தில், படத்தில் வில்லன் தோற்றத்தில் நடித்திருப்பார் நடிகர் ரஜினிகாந்த். இது எப்படி இருக்கு என்ற டயலாக் மூலம் பட்டிதொட்டி எங்கும் அதிகளவில் பேசப்பட்டார்! இப்படத்திற்காக அவருக்கு வழங்கப்பட்ட சம்பளம் மூன்றாயிரம் ரூபாய் மட்டுமே.

கமல்ஹாசன்:
படத்தின் கதாநாயகன் கமல்ஹாசன்! சப்பாணி என்னும் கதாப்பாத்திரத்தில் அன்றைய மாஸ் ஹீரோக்கள் நினைத்து கூட பார்க்க முடியாத தோற்றத்தில் வெறும் கோமணம் கட்டிக்கொண்டு நடித்து இருப்பார். அப்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்ககளில் ஒருவராக இருந்ததால், அவருடைய சம்பளம் 27000 ரூபாய். நடிப்பிலும் சரி, மேக்கப்பிலும் சரி நிஜத்தில் சப்பாணி என்னும் அந்த ஒரு கதாப்பாத்திரத்தை கண் முன்னே காட்டி இருப்பார் இயக்குனர் பாரதிராஜா.

ஸ்ரீ தேவி:
‘மயிலு; அப்போதைய இளைஞர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர், மயிலு (எ) ஸ்ரீதேவி! கதாநாயகியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்பதால் இந்த படத்திற்காக இவர் வாங்கியச் சம்பளம் 9000 ரூபாய். ஸ்ரீ தேவி அதன் பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் நடித்து இந்திய அளவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார், என்பது அனைவரும் அறிந்ததே!

கவுண்டமணி:
காமெடிக் கதாபாத்திரங்கள் வளர்ந்து வரக்கூடிய நேரத்தில், நடிகர் கவுண்டமணிக்கு இந்த படத்தில் வாய்ப்பு கிடைத்தது. பரட்டைக்கு வலது கையாக, இந்த படத்தில் வரும் கவுண்டமணி அவ்வப்போது பேசிய வில்லத்தன வசனங்களும், காமெடி கவுண்டர்களும் மிகவும் பிரபலமானது! இந்த படத்திற்காக கவுண்டமணி வாங்கிய சம்பளம் ஆயிரம் ரூபாய்.

காந்திமதி:
குணச்சித்திர கதாபாத்திரத்தில் சிறப்பாக நடிக்க கூடிய நடிகை காந்திமதி. இவர் நளினத்தோடு வசனம் சொல்லும் அழகே தனி! முன்னதாக, கதாநாயகியாக கலக்கிக் கொண்டிருந்த இவர், பின்னர் அம்மா, அக்கா வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார்! இந்தப் படத்தில் ஸ்ரீதேவிக்கு அம்மாவாக நடித்து இருப்பார்.. இந்த படத்திற்காக நடிகை காந்திமதி வாங்கிய சம்பளம் ஆயிரம் ரூபாய்.

சபீர் அகமது:
இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர், டாக்டர்! டாக்டராக நடித்த நடிகர் சபீர் அகமது. இந்த டாக்டர், மயிலிடம் செய்யும் குறும்புகளும்,செய்யும் சில்மிஷங்களும் நிறைந்த காட்சிகள் படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருந்தது. இயக்குனர் பாரதிராஜா இந்த கதாப்பாத்திரத்தை மிக நேர்த்தியாக வடிவமைத்து இருப்பார். இந்த கதாபாத்திரத்தில் நடித்த சபீர் அகமது இந்த படத்துக்காக வாங்கிய சம்பளம் 250 ரூபாய் தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *