

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்தடுத்து சிறப்பான இயக்குநர்களின் படங்களில் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவரை வைத்து இளம் இயக்குநர்கள் மாஸ் படங்களை கொடுத்து வருகின்றனர். கமர்ஷியல் அவதாரங்களை விட்டுவிட்டு தற்போது சேலஞ்சிங்கான கதாபாத்திரங்களில் ரஜினி நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது, ரஜினி நடிக்கும் 170வது திரைப்படம் குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது!
சிவா இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார் ரஜினி! இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்த போதிலும் சிறப்பான வசூலை குவித்தது. ரஜினிகாந்தின் அடுத்த படத்தை இயக்குபவர்கள் பட்டியலில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி, கேஎஸ் ரவிக்குமார், கார்த்திக் சுப்புராஜ், பாண்டிராஜ் என பலரின் பெயர்கள் இருந்தன!
இதையடுத்து, ரஜினியின் அடுத்தப்படம் குறித்த அறிவிப்பு சில தினங்களுக்கு முன்பு வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இந்தப் படத்தை இயக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இந்தப் படத்தின் சூட்டிங் ஏப்ரல் இறுதியில் அல்லது மே மாதத்தின் துவக்கத்தில் துவங்கும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் தலைவர் 170வது படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்க உள்ளதாகவும், போனிக்கபூர் மற்றும் ராகுல் இணைந்து இப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அருண்ராஜா காமராஜ் தற்போது நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை இயக்கி வருகிறார். தலைவர் 169 மற்றும் 170 பட அறிவிப்பால் ரஜினியின் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

