• Sat. Jan 10th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கலப்பு திருமணம் செய்த காதல் ஜோடி கமிஷனர் அலுவலகத்தில் தஞ்சம்…

சேலத்தில் கலப்பு திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

சேலம் அருகே நீர்முள்ளிகுட்டை பகுதியை சேர்ந்த 19 வயதான நர்சிங் மாணவி மாலினி என்பவர் வாழப்பாடி பகுதியை சேர்ந்த ஓட்டுனர் சதீஷ்குமார் என்பவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிய வரவே இருவரும் வேறு வேறு சமூகம் என்பதால் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதையடுத்து இருவரும் வீட்டை விட்டு வெளியேறி இன்று சேலம் கிச்சிப்பாளையம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோயிலில் கலப்பு திருமணம் செய்து கொண்டனர்.

பின்னர் இருவரும் பாதுகாப்பு கேட்டு சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர். இதுகுறித்து இருவரின் பெற்றோர்களை அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.