• Tue. Dec 16th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

விழா மேடையில் அழுத அமைச்சர்!

கடலூர் மாவட்டம் திட்டக்குடியில், தமிழக அரசின் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது! நிகழ்ச்சிக்கு அமைச்சர் சி.வி.கணேசன் தலைமை ஏற்றார்!

நிகழ்ச்சி துவங்கி விழா மேடையில் அமைச்சர் பேச தொடங்கியபோது, தன் மனைவியின் இறப்பை நினைத்து தேம்பி அழுதார். அமைச்சரின் மனைவி இறந்த பிறகு, அவரது சொந்த கிராமமான கழுதூரில் நடக்கும் முதல் நிகழ்ச்சி என்பதால், அங்கு கூடியிருந்தவர்கள் மற்றும் உறவினர்களை பார்த்து உணர்ச்சி வசப்பட்டு கண் கலங்கினார், அமைச்சர்!

பின், அருகில் இருந்தவர்கள் அமைச்சரை ஆசுவாசப்படுத்தினர்! அதனைத்தொடர்ந்து, பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகளை அமைச்சர் சி.வி.கணேசன் வழங்கினார்.