விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகர திமுக ஐந்தாவது பகுதி கழகம் சார்பில் திமுக அரசின் நான்காம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் சிவகாசி தேவர் சிலை அருகில் நடைபெற்றது. சிவகாசி மாநகர திமுக செயலாளர் உதயசூரியன் தலைமை வகித்தார். மேயர் சங்கீதா இன்பம், சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் டாக்டர் செண்பக விநாயகம் ,செயற்குழு உறுப்பினர் சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டு பேசியது
சிவகாசி மாநகராட்சியில் பல்வேறு நலத்திட்ட பணிகள் சீரிய முறையில் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலம் அமைக்க தீவிர முயற்சி எடுக்கப்பட்டு சிறப்பாக பணிகள் நடைபெற்று வருகின்றன. திருத்தங்களிலும் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது. விருதுநகரில் இருந்து சிவகாசி தார் சாலை நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது இதன் மூலம் சிவகாசியை சுற்று வட்டச்சாலை அமைக்கும் பணியும் விரைவில் தொடங்க உள்ளது.
சாத்தூரிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் சாலை நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்தப்பட உள்ளது. குடிநீர் பிரச்சனையை தீர்க்க திமுக ஆட்சிக்காலத்தில் மாணவர் கூட்டு குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டது தற்போது ரூபாய் 11 கோடி செலவில் சிவாஜி மாநகராட்சி அலுவலகம் 10 கோடி செலவில் வணிக வளாகம் 15 கோடி செலவில் உள்ள அரங்கம் 3-வோடியில் அறிவிசார் மையம் என பல்வேறு வளர்ச்சி பணிகளும் சிவகாசி பகுதியில் நடைபெற உள்ளது முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சி காலத்தில் தான் சிவகாசியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் பேசினார்..
சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை ஐந்தாவது பகுதி கழக செயலாளர் காளிராஜன் செய்திருந்தார் .வட்டக் கழக செயலாளர் முனியசாமி நன்றி கூறினார்.