புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் மினி பஸ் திட்டத்தை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் துவக்கி வைத்தார்.
புதுக்கோட்டை மாவட்டம்/ மாநகராட்சி, புதிய பேருந்து நிலையத்தில், புதிய விரிவான மினி பஸ் திட்டம் – 2024ன் படி பேருந்து வசதி கிடைக்கப் பெறாத இடங்களில் வசிக்கும் மக்கள் பயன்பெறும் வகையில் புதிய மினி பஸ் சேவையினை, மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா, இ.ஆ.ப., தலைமையில் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

உடன், புதுக்கோட்டை மாநகராட்சி ஆணையர் த.நாராயணன், வட்டார போக்குவரத்து அலுவலர் (பொ) நடராஜன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர். இந்த மினி பேருந்து அன்னவாசல், சித்தன்னவாசல், இலுப்பூர், வீரடிப்பட்டி போன்ற மக்கள் பயன்பாட்டிற்கு பகுதிகளுக்கு சென்றடையும். இதனால் பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.