

மதுரை மாவட்டம், மத்திய சட்டமன்ற தொகுதி எஸ்.எஸ்.காலனி பகுதியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில், நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில், கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு சீதனப் பொருட்களை, தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் வழங்கினார்.
உடன், மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா, மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், மண்டலத்தலைவர் பாண்டிச்செல்வி , ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஷீலா சுந்தரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


