• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

சார் பதிவாளர் அலுவலகத்தை திறந்து வைத்த அமைச்சர் பி.மூர்த்தி..,

ByP.Thangapandi

Feb 28, 2026

மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட சார் பதிவாளர் அலுவலகங்களை வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் பி.மூர்த்தி இன்று திறந்து வைத்தார்.,

இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 17 வது வார்டு பகுதியில் சுமார் 2 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட உசிலம்பட்டி சார் பதிவாளர் அலுவலகத்தை அமைச்சர் பி.மூர்த்தி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

தொடர்ந்து அமைச்சர் பி.மூர்த்தி, வணிவரித்துறை அரசு செயலாளர் ஷில்பா பிரபாகரன் சதீஷ் மற்றும் பத்திரப்பதிவுத்துறை அரசு செயலாளர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், திமுக மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் இணைந்து குத்துவிளக்கு ஏற்றி வைத்து சார் பதிவாளர் அலுவலகத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.

இந்நிகழ்வில் பத்திரப்பதிவு துறை அலுவலர்கள் மற்றும் திமுக வின் நகர ஒன்றிய கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.