“புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிக ஜல்லிக்கட்டு போட்டிகளை நீங்கள் நடத்தினாலும், உங்களுக்கு “ஜல்லிக்கட்டு நாயகன்” என்று எங்கள் பள்ளிகல்வித்துறை அமைச்சர் தான் திருச்சி மாவட்டம் சூரியூர் ஜல்லிகட்டில் பெயர் வைத்தார்” சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு அமைச்சர் KN.நேரு புகழாரம்
தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்றைய இன்று சட்டப்பேரவை கூட்டத்தொடர் கேள்வி நேரத்தின் போது, விராலிமலை சட்டமன்ற தொகுதி அன்னவாசல் பேரூராட்சி பெரியகுளம் கண்மாயில் அமைந்துள்ள ஜல்லிக்கட்டு திடலில் குடிநீர் தொட்டி அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்து பேசினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் KN.நேரு..,
அன்னவாசல் மையப்பகுதியில் அமைந்துள்ள குப்பை கிடங்கினால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. அதனால் வேறு இடம் மாற்றி அமைத்து சுத்தப்படுத்தி கொடுக்கவும் கோரிக்கை வைத்தார். பின்னர் ஜல்லிக்கட்டுக்காக மட்டுமல்ல அந்த பெரிய குறித்து, அருகில் அமைந்துள்ள சிவன் கோயிலில் தான் மாசி மகா திருவிழா தேரோட்டம் , பூச்சொரிதல், ஜல்லிக்கட்டு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். எனவேதான் அங்கு குடிநீர் அவசியமாகிறது. அது மட்டுமில்லாமல் அந்த பெரியகுளம் வழியாக, வடகாடு செல்லும் சாலை தடுப்புச்சுவர் அமைத்து தரவேண்டும் என்பது முக்கியமான கோரிக்கையாக இருக்கிறது.
ஜல்லிக்கட்டு என்பது நமது நாடி, நரம்பில் ரத்தத்தில் ஊரின விஷயம், 9 அரசுத் துறையில் NOC வாங்கி தான் இந்த ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. அதாவது நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி, ஊராட்சியில் எங்கெல்லாம் ஜல்லிக்கட்டு நடக்கிறதோ அங்கே மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலோ, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி சார்பிலோ பார்வையாளர்களுக்கும், வீரர்களுக்கும் குடி தண்ணீரில் வசதியை எப்போதும் நிரந்தரமாக ஏற்படுத்தித் தருமாறு நிரந்தரமாக ஏற்படுத்தி தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.