• Wed. Mar 4th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

ஈரோடு மாவட்ட மக்களுக்கு அமைச்சர் சொன்ன ஹேப்பி நியூஸ்!

By

Sep 9, 2021 ,

ஈரோடு கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் தொடங்கி வைக்க உள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் பேசிய அதிமுக உறுப்பினர் ஜெயக்குமார், ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதிக்கு உட்பட்ட கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடித்து, குடிநீர் விநியோகம் செய்ய அரசு ஆவன செய்யுமா என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு, கொடிவேரி கூட்டுக் குடிநீர் திட்ட பணிகள் 95 சதவிகிதம் நிறைவடைந்துள்ளதாக தெரிவித்தார். 5 லட்சத்து 47 ஆயிரம் பேர் பயன்பெறும் வகையில் கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்டத்தை அடுத்த மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளதாகவும் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.