விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் கட்டி முடிக்கப்பட்ட புதிய சமுதாயக்கூட கட்டிடங்களே பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியானது வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

சாத்தூர் அருகே போத்திரெட்டிபட்டி, கஞ்சம்பட்டி, சிவனைந்தபுரம், உள்ளிட்ட கிராமங்களில் கட்டி முடிக்கப்பட்ட சமுதாயக்கூட கட்டிடங்களே மக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் கனகராஜ்,சாத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் கடற்கரைராஜ், வருவாய்த்துறைனர் மற்றும் அரசு அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.



