ஒட்டன்சத்திரம் தொகுதியில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் கடுமையான வெயிலில் சாலை ஓரத்தில் அமைச்சர் சக்கரபாணி நின்று நுங்கு சாப்பிட்ட வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியானது.

திண்டுக்கல் மேற்கு திமுக மாவட்ட செயலாளரும், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சருமான அர.சக்கரபாணி ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள இடையக்கோட்டை மற்றும் சுற்றுப்புற கிராமங்களுக்கு சென்று ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்து கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் சாதனைகள் மற்றும் ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்தும் கிராமங்களில் வீடு வீடாக சென்று பொது மக்களை சந்தித்து கூறி வருகிறார்.
கடுமையான வெயில் நேரத்தில் எந்தவித பந்தா இல்லாமல் பொதுமக்களை எளிமையாக அமைச்சர் அர.சக்கரபாணி சந்தித்து வருவது அனைத்து தரப்பு மக்களும் வரவேற்று வருகின்றனர்.
இந்நிலையில் மதிய நேரத்தில் கடுமையான வெயிலால் வெப்பக் காற்றால் தெருவில் நடமாட முடியாத நிலையில் அமைச்சர் அர.சக்கரபாணி கடுமையான வெயிலை பொருட்படுத்தாமல் மக்களை சந்தித்து வருகின்ற நிலையில் தனது காரில் வேடசந்தூர் – ஒட்டன்சத்திரம் மாநில நெடுஞ்சாலையில் செல்லும்போது காளாஞ்சிபட்டி அருகே சாலை ஓரத்தில் நுங்கு விற்பதை கண்டவுடன் அமைச்சர் அர.சக்கரபாணி தனது காரில் இருந்து இறங்கி நுங்கு விற்பனை செய்பவரிடம் பணம் கொடுத்து நுங்கு வாங்கி அதை அவரே எடுத்து ருசித்து சாப்பிட்டார்.

அப்போது அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு அமைச்சர் அர.சக்கரபாணி மக்களோடு மக்களாக நுங்கு சாப்பிட்டதை கண்டு ஆச்சரியத்தோடு பார்த்துச் சென்றனர்.
தேர்தல் களத்தின் சூட்டோடு, வெயில் காலத்தின் வெப்பத்தை தணிக்க அமைச்சர் அர.சக்கரபாணி நுங்கு ருசித்து சாப்பிட்டதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் தங்களின் செல்போன் கேமராவில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.




