• Sat. Jan 10th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மினி சரக்கு வாகனம் விபத்து..,

BySeenu

Aug 1, 2025

கோவை, சூலூர் அருகே குட்டி யானை சரக்கு வாகனம் அருகம்பாளையம் பகுதியில் உள்ள வளைவு சாலையில், பிசியோதெரபி டாக்டருக்கு சொந்தமான மினி சரக்கு வாகனம் ஒன்று விபத்துக்கு உள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இன்று காலை நடந்த இந்த விபத்தில், வாகனத்தின் பிரேக் பிடிக்காததால் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து, வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்ததாக தெரியவந்து உள்ளது.

இந்த விபத்து தொடர்பான சி.சி.டி.வி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி, பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்த உள்ளது.

விபத்து குறித்து உள்ளூர் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

வாகன ஓட்டுநரின் நிலை மற்றும் விபத்தின் முழு விவரங்கள் குறித்து மேலும் தகவல்கள் வெளியாக உள்ளன.

இந்த சம்பவம், வளைவு சாலைகளில் வாகனங்களை பயன்படுத்தும் போது கூடுதல் எச்சரிக்கை தேவை என்பதை உணர்த்தி உள்ளது.