• Sun. Nov 16th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்து மில் தொழிலாளி படுகாயம்!

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ரயில் நிலையத்திற்கு இரவு 7 மணி அளவில் மயிலாடுதுறையிலிருந்து செங்கோட்டை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து சேர்ந்தது. அந்த சமயம் ரயிலில் இருந்து ஒரு நபர் இறங்கும் போது தவறி கீழே விழுந்தார். உடனே அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து பின், அவசர சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து விசாரணையில் அருப்புக்கோட்டை அருகே உள்ள செவல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார் வயது 35 எனவும், இராஜபாளையத்தில் உள்ள தனியார் நூற்பு ஆலையில் பணிபுரிந்து வருபவர் என்றும் தெரியவந்தது. தினமும் அருப்புக்கோட்டையில் இருந்து ரயிலில் ஏறி இராஜபாளையத்தில் இறங்கி வேலை முடித்து திரும்பவும் அருப்புக்கோட்டை சென்று விடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செந்தில்குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.