வருகிற ஜனவரி 17 (வெள்ளி) அன்று புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 108வது பிறந்த தினத்தை முன்னிட்டு, திருத்தங்கல் தங்க கலசம் எம்.ஜி.ஆர் மன்றம் (பதிவு எண் 24004) சார்பாக, ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள், அன்னதானம் மற்றும் மரக்கன்றுகள் நடும் விழாவிற்கான சிறப்பு அழைப்பிதழை விருதுநகர் அதிமுக மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜியிடம், திருத்தங்கல் கிழக்கு பகுதி கழக அவைத்தலைவரும், தங்ககலசம் எம்ஜிஆர் மன்ற செயலாளருமான கோவில்பிள்ளை நேரில் வழங்கி சிறப்பு அழைப்புவிடுத்து மகிழ்ந்தார். மேலும் இந்நிகழ்வின்போது கழக நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.

