கண் இமைபோல எம்.ஜி.ஆர்,ஜெயலலிதாவின் ஆன்மா அதிமுகவை பாதுகாப்பதாக ஓபிஎஸ் மூத்த மகன் ஜெயபிரதீப் அறிக்கை வெளியிட்டுள்ளார்
பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஓபிஎஸ்க்கு சாதகமாக வந்துள்ள நிலையில் ஓபிஎஸ் மூத்த மகன் ஜெயபிரதீப் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அதில் புரட்சித் தலைவி ஜெயலலிதா,புரட்சித்தலைவர் எம்.ஜி.ராமச்சந்திரன் ஆகியோரின் பூத உடல் மறைந்தாலும் அவர்களின் ஆன்மா ஏதே ஒரு ரூபத்தில் அதிமுகவையும் ,அதன் உண்மைதொண்டர்களையும் கண் இமைபோல பாதுகாத்து வழிநடத்துகிறது..உயர்நீதிமன்ற நீதியரசர் ஜெயசந்திரன் தீர்ப்பு மூலம் இது நிரூபணம் ஆகியுள்ளது.மேலும் ஜெய -லலிதாவில் முதல் இரண்டு எழுத்துக்கள் ஜெய,மேலும் ராமசந்திரனில் -சந்திரன் ஆகியவற்றை இணைத்து ஜெயசந்திரன் என தனியாக குறிப்பிட்டு காட்டியுள்ளார் .வெற்றி நமதே கழகத்தின் உண்மை தொண்டன் வி.ப.ஜெயபிரதீப் என அறிக்கை வெளியிட்டுள்ளார்.
எம்.ஜி.ஆர்,ஜெயலலிதாவின் ஆன்மா அதிமுகவை கண் இமைபோல பாதுகாக்கிறது- ஜெயபிரதீப் அறிக்கை
