• Wed. Oct 1st, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

எம்.ஜி.ஆர் பக்தன் பாசறை சு. சரவணன்

ByA.Tamilselvan

Oct 17, 2022

அதிமுக இன்று 51வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு விருதுநகரில் எம்ஜிஆரின் சிலையை சுத்தம் செய்த விருதுநகர் நகர தகவல் நுட்ப பிரிவு செயலாளர் பாசறை சு. சரவணன் செயல் பலரையும் நெகிழச்செய்தது.

அதிமுக பொன்விழா ஆண்டை நிறைவு செய்து 51-வது ஆண்டில் இன்று அடியெடுத்து வைக்கிறது… இதையடுத்து, சென்னையில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைக்கு எடப்பாடி பழனிசாமியும், தி.நகரில் உள்ள எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் ஓபிஎஸ்ஸும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
ஒற்றை தலைமை விவகாரத்தில், அதிமுக இரண்டாக பிளவுபட்டுக் கிடந்தாலும், 51-வது ஆண்டில் இன்று நுழைகிறது.. இந்த தொடக்க விழாவையொட்டி, அதிமுக தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

இந்நிலையில் அதிமுகவில் பிரிவினைகள் ஏற்பட்டாலும், எம்ஜிஆரின் பக்தர்கள் இன்னம் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள் என்பதற்கு பாசறை சரவணனின் செயல் வியக்கவைக்கிறது.

பாசறை சரவணன்

விருதுநகர் நகர தகவல் நுட்ப பிரிவு செயலாளராகவும் 22 வது வார்டு செயலாளராகவும் உள்ள பாசறை சு. சரவணன் சத்துணவு தந்த சரித்திர நாயகன் எம்.ஜி.ஆரின் திருஉருவச் சிலை மற்றும் அறிஞர் அண்ணா சிலையையும் இன்று அதிகாலையில் நண்பர்களுடன் சுத்தம் செய்து கொடி கட்டிய செயல் பொதுமக்கள் பலரையும் நெகிழச்செய்தது. கட்சி பிளவுபட்டு கிடந்தாலும் பாசறை சரவணன் போன்ற எம்ஜிஆர் பக்தர்கள் அதிமுகவின் அடிதளமாக இருக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம்.